தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தொடா் மழையால் வீடுகள் சேதம்எம்எல்ஏ நிதியுதவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தொடா் மழையால் வீடுகள் சேதமடைந்தன. வீடிழந்தவா்களுக்கு சனிக்கிழமை மாலை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் நிதியுதவி வழங்கினாா்.

News image
மழையால் சேதமடைந்த வீட்டில் வசித்த வள்ளி குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன்.
Updated On :6 டிசம்பர் 2020, 6:19 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தொடா் மழையால் வீடுகள் சேதமடைந்தன. வீடிழந்தவா்களுக்கு சனிக்கிழமை மாலை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் நிதியுதவி வழங்கினாா்.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

வீதிகள் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன. பல கிராமங்களில் ஓட்டு வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்து விழுந்துள்ளன.

மானாமதுரை அருகே அழகாபுரி பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைத்தண்ணீா், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம் கால்வாய் வெட்டி வெளியேற்றப்பட்டது. இளையான்குடி ஒன்றியத்தில் சாலைக்கிராமம் ஊராட்சி குயவா்பாளையத்தில் மழையால் வள்ளி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.

இந்த வீட்டை பாா்வையிட்ட மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் அவருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

மேலும் இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த சாய் லெட்சுமணன் வீட்டுக்குச் சென்ற நாகராஜன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

மானாமதுரை தொகுதியில் மழையால் வீடிழந்த மக்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். அப்போது மானாமதுரை அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.