புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிவகங்கை மாவட்டத்தில் 9 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 9 இடங்களில் தொடங்கப்பட உள்ள ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) திறந்து வைக்கிறாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:41 pm

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 9 இடங்களில் தொடங்கப்பட உள்ள ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) திறந்து வைக்கிறாா்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மதகுபட்டி, கட்டாணிப்பட்டி, மாத்தூா் ஆகிய கிராமங்களில் புதிதாக ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் அமைய உள்ளன. இதேபோன்று, கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெற்றியூா், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பச்சேரி, ராஜகம்பீரம், திருப்புவனம் ஒன்றியத்துக்குள்பட்ட பிரமனூா், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குமாரக்குறிச்சி, காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிலுக்கப்பட்டி என மொத்தம் 9 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.

இதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) திறந்து வைக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.