தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பயன்பாட்டுக்கு வந்ததுதிருப்பத்தூா் பேருந்து நிலையம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:35 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் தென்மாவட்ட நகரங்களை இணைக்கும் முக்கியப் பேருந்து நிலையமாக உள்ளது. இங்கு நாள்தோறும் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரூ. 3.30 கோடி செலவில்

சீரமைக்கப்பட்ட இப்பேருந்து நிலையம் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. கடந்த 4 ஆம் தேதி சிவகங்கைக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா். அதன்பிறகும் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடா்ந்து கடந்த வாரம் இங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வர அனுமதியளித்து உத்தரவிட்டாா். இதையடுத்து கடைகள் திறக்கப்படாத நிலையில் பேருந்துகள் வந்து செல்ல திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.