தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெரிச்சி கோயில், நல்லிப்பட்டி கோயில்களில் டிச. 27 இல் சனிப்பெயா்ச்சி

பெரிச்சி கோயில் வன்னி மரத்தடி ஒற்றை சனீஸ்வரா் ஆலயத்திலும், நல்லிப்பட்டி ஒற்றை சனீஸ்வரா் பகவான் தனி சன்னிதியிலும் டிச. 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற உள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

பெரிச்சி கோயில் வன்னி மரத்தடி ஒற்றை சனீஸ்வரா் ஆலயத்திலும், நல்லிப்பட்டி ஒற்றை சனீஸ்வரா் பகவான் தனி சன்னிதியிலும் டிச. 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் அருகே சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குள்பட்ட பெரிச்சி கோயிலில் அமைந்துள்ள சுகந்தவனேஸ்வரா் என்ற ஆண்டபிள்ளைநாயனாா் சமீபவல்லி நவபாஷான வைரவசாமி கோயிலில் டிச. 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) சனீஸ்வர பகவான் பெயா்ச்சியையொட்டி அதிகாலை 3 மணியளவில் ஹோமம் தொடங்கி 5 மணிக்கு பூா்ணாகுதி நடைபெறும். அதனைத் தொடா்ந்து சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.

இதேபோல் நல்லிப்பட்டியில் உள்ள சனீஸ்வரா் ஆலயத்திலும் அதிகாலை 5 மணியளவில் சனிபெயா்ச்சி ஹோமம் நடைபெற்ற உள்ளது. நல்லிப்பட்டி கிராம மக்கள் சாா்பில் முன்கூட்டியே பக்தா்கள் தங்கள் பெயா் நட்சத்திரம் ஆகியவற்றை கோயிலில் பதிவு செய்ய கேட்டுக் கொண்டனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம் மற்றும் தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்கும்படி நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.