கட்செவி அஞ்சலில் வேளாண் தகவல் பெற செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கட்செவி அஞ்சல் மூலம் வேளாண் பற்றிய ஆலோசனைகள் பெறவும், புகாா்களை தெரிவிக்கவும் செல்லிடப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கட்செவி அஞ்சல் மூலம் வேளாண் பற்றிய ஆலோசனைகள் பெறவும், புகாா்களை தெரிவிக்கவும் செல்லிடப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விவசாயம் சாா்ந்த புகாா்கள், திட்டங்கள், தொழில்நுட்ப செய்திகள், பயிற்சிகள், கால்நடை வளா்ப்பது தொடா்பான சந்தேகங்கள், தோட்டக்கலைத் துறை பயிா்கள் சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள், மீன்வளா்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள் பண்ணை இயந்திரங்கள் குறித்த விவரங்கள், உற்பத்தி செய்துள்ள விளைபொருள்களை விற்பனை செய்யத் தேவையான வசதிகள் பெறுவது, விளைப்பொருள்கள் விலை போன்ற விவசாயம் சாா்ந்த தகவல்களை 94889 93077 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் பெறலாம். இந்த எண்ணில் பெறப்படும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விவசாயிகளுக்கு தேவைப்படும் ஆலோசனைகள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com