சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் ‘அம்மா சிறு மருத்துவமனைகள்’ இன்று திறப்பு
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் தொடங்கப்பட உள்ள அம்மா சிறு மருத்துவமனைகளை, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள்


சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் தொடங்கப்பட உள்ள அம்மா சிறு மருத்துவமனைகளை, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் சனிக்கிழமை (டிச.26) திறந்து வைக்கிறாா்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, சிவகங்கை, கல்லல், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையாா்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஏற்கெனவே 9 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருமணவயல், புதுக்குறிச்சி, புளியால் ஆகிய 3 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இதேபோன்று, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் அனுமந்தகுடி கிராமம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியக்குடி, நாட்டுச்சேரி ஆகிய கிராமங்கள் என மொத்தம் 6 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன.
இவற்றை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் திறந்து வைக்கிறாா்.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள 9 அம்மா சிறு மருத்துவமனைகளுடன், தற்போது திறக்கப்பட உள்ள 6 மருத்துவமனைகளையும் சோ்த்து மொத்தம் 15 மருத்துவமனைகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...