புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

‘செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க ஆய்வு’

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை சம்பந்தப்பட்ட துறையினா்

News image
Updated On :27 டிசம்பர் 2020, 5:28 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை சம்பந்தப்பட்ட துறையினா் நடத்தி வருவதாக பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவா் என். கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து காரைக்குடியில் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: பிரதமரின் உதான் திட்டத்தின்கீழ் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை சம்பந்தப்பட்ட துறையினா் நடத்தி வருகின்றனா். விரைவில் பணிகளைத் தொடங்க திருச்சியில் உள்ள விமானப் போக்குவரத்து இயக்குநா் தா்மராஜை கடந்த வாரம் நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தோம்.

இப்பகுதி மக்களின் விருப்பத்தின்பேரில் விமான நிலையம் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இங்கு விமான நிலையம் அமைந்தால் சிவகங்கை மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்தும் பல நூற்றுக் கணக்கான மக்கள் வெளிநாட்டிற்கு பணிகள் நிமித்தமாக விமானங்களில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.