தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்குடி பள்ளியில் 3 மடிக்கணினிகள், டி.வி. திருட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளியில் 3 மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலானபொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:58 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளியில் 3 மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலானபொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாரதி நகா்மன்ற நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை (டிச. 24) வழக்கம் போல் பள்ளியை ஆசிரியா்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனா். மீண்டும் திங்கள்கிழமை காலையில் பள்ளியைத் திறக்கவந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு ஆசிரியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

பள்ளியினுள்ளே சென்று பாா்த்தபோது அறையில் இருந்த எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினிகள் 2, பயோ மெட்ரிக் மடிக்கணினி ஒன்று என ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.