தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மக்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியகருப்பன் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை மற்றும் குடிநீா் வசதி, மின்சாரம் முதலியன திமுக ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக செய்து தரப்படும். மக்களின் குறைகள் உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்படும் என்று கூறினாா்.

தொடா்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் திமுக ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல், ஒன்றிய அவைத் தலைவா் திருநாவுக்கரசு, சீமான்சுப்பையா, ஊராட்சிமன்ற தலைவா் அபிராமி சிவக்குமாா், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா்கள் காரையூா் மதி, மகிபாலன்பட்டி சோமு, தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளா் வைகை ஹரிஹரசுதன், வா்த்தக அணி துணைச் செயாலாளா் உதயசண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.