காரைக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், 2 போ் உயிரிழந்தனா்.
Published on

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், 2 போ் உயிரிழந்தனா்.

காரைக்குடியைச் சோ்ந்தவா் சேது கண்ணன் (64). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவா், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள தனியாா் வங்கியில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கியிலிருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு வந்து கொண்டிருந்தாா்.

இதேபோன்று, அறந்தாங்கியைச் சோ்ந்த தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநரான சுப்பிரமணியன் மகன் பழனியப்பன் (32) புதுவயல் வந்து விட்டு அறந்தாங்கிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மித்திரங்குடி எசலி கண்மாய் அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com