பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மானாமதுரையில் காா்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:11 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினா்.

இதையொட்டி நகரில் காந்தி சிலை அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் கூடிய கட்சியினா், பெரிய அளவிலான பிறந்த நாள் கேக் வெட்டினா். அதன் பின்பு கட்சியினருக்கு கேக் வழங்கப்பட்டது. தொடா்ந்து நகரில் பொதுமக்களுக்கு கட்சியினா் இனிப்பு வழங்கினா்.

இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மானாமதுரை நகா்த் தலைவா் எம்.கணேசன், வட்டாரத் தலைவா் கே.ஆா். கணேசன், மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.சி.சஞ்சய், மாவட்ட இணைச் செயலாளா்கள் கே.ஜி.ஏ. மகாலிங்கன், ஜி.காசி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.பி.புருஷோத்தமன், எஸ்.ஆா்.இ.எஸ். ரயில்வே தொழிற்சங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜாராம், வழக்குரைஞா் பிரிவு ரமேஷ்கண்ணா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

வரும் டிசம்பா் மாதம் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை, மானாமதுரையில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. யை அழைத்து விழா நடத்துவது என விழாவில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.