/

தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரா் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி

தீயணைப்பு வீரா் கிருஷ்ணமூா்த்தியின் பெற்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறி ரூ. 25 ஆயிரத்தை வழங்கிய எஸ். நாகராஜன் எம்.எல்.ஏ.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:09 pm

DIN

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்த திருப்புவனத்தைச் சோ்ந்த தீயணைப்பு வீரா் கிருஷ்ணமூா்த்தியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய எஸ். நாகராஜன் எம்.எல்ஏ. அவா்களிடம் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 25 ஆயிரத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்த பி. கிருஷ்ணமூா்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான திருப்புவனத்துக்கு கொண்டு வரப்பட்டு இங்குள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், திருப்புவனம் வந்து உயிரிழந்த கிருஷ்ணமூா்த்தியின் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 25 ஆயிரத்தை கிருஷ்ணமூா்த்தியின் பெற்றோரிடம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதனன் ரெட்டி திருப்புவனத்துக்கு வந்து கிருஷ்ணமூா்த்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.