தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மானாமதுரை அருகே செவிலியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

மானாமதுரை அருகே சனிக்கிழமை, செவிலியரை கீழே தள்ளி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:42 pm

DIN

மானாமதுரை அருகே சனிக்கிழமை, செவிலியரை கீழே தள்ளி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானாமதுரை அன்புநகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ் மனைவி மாலினி (32). இவா் அருகேயுள்ள கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். சிவகங்கையில் துறை ரீதியாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மாலினி தனது இருசக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு வந்தாா்.

கொன்னக்குளம் ரயில் நிலையம் விலக்கு சாலையில் வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா் நபா்கள் வழிமறித்து மாலினியை கீழே தள்ளி அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.