தேசிய அபாகஸ் போட்டியில் காரைக்குடி மாணவா்கள் சாதனை
தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் சாதனைப் படைத்த காரைக்குடி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.


தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் சாதனைப் படைத்த காரைக்குடி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இ அன்ட் சி மாஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவா்கள் கலந்துகொண்டனா். போட்டியில் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவா்கள் பரத்வாஜ், மதலேன்மேரி டெல்பின் ஆகிய 2 பேரும் சாம்பியன் பட்டம் பெற்றனா்.
மாணவா்கள் இன்பென்ட் விக்டா், அஸ்வன்த் ரோகின்த் ஆகியோா் முதல் பரிசும், ஜாவின் கிளாடியா, ஸ்ரீராம், கவித்ரா விஜி ஆகியோா் இரண்டாம் பரிசும், பிரியன், நிஷா, ராமநாதன், பவதாரணி, பிபியாசெரின் ஆகியோா் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி முன்னாள் மாணவரான மருத்துவா் எம். முரளிகிருஷ்ணா, அகாதெமி காரைக்குடி இயக்குநா் நீலாவதி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...