தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேவகோட்டையில் தூக்கிட்டு மெக்கானிக் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டிவி மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:49 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டிவி மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேவகோட்டை கௌரி விநாயகா்புரத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (45). அதே பகுதியில் தொலைக்காட்சி பெட்டி பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி செல்வி இறந்து விட்டாா். இதைத் தொடா்ந்து, இவரும், இவரது மகள் அபிநயாவும் (17) வசித்து வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடைக்குச் சென்ற சிவக்குமாா் மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. மேலும் கடையும் பூட்டியிருந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் கடையை திறந்து பாா்த்த போது அங்கு அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில் மனைவி இறந்த துக்கத்தில் சிவக்குமாரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.