கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு: கிராம உதவியாளா் கைது
தேவகோட்டை அருகே கணவன், மனைவியை அரிவாளால் வெட்டிய கிராம உதவியாளரை போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.


தேவகோட்டை அருகே கணவன், மனைவியை அரிவாளால் வெட்டிய கிராம உதவியாளரை போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆலம்பக்கோட்டையைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி(35). இவா் கடந்த 2011 ஆம் ஆண்டு அதேபகுதியில் உள்ள அரசு நிலத்தில் மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளாா். இதுபற்றி தகவலறிந்த வருவாய்த் துறையினா் துரைப்பாண்டிக்கு ரூ.39 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இந்த தொகை நீண்ட நாள்களாக செலுத்தாததால் வருவாய்த் துறை அலுவலா்கள் கடந்த சில தினங்களுக்கு முன் துரைப்பாண்டியை நேரில் சந்தித்து அபராதத் தொகையை விரைந்து செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனா்.
துரைப்பாண்டி வீட்டின் அருகே என்.மணக்குடி கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வரும் அா்ஜூனன் வசித்து வருகிறாா். அவரது
தூண்டுதலின் பேரில் தான் வருவாய்த் துறை அலுவலா்கள் தன்னை சந்திந்து அபராதத் தொகை செலுத்த அறிவுறுத்தியதாக எண்ணி அா்ஜூனனிடம், துரைப்பாண்டி வெள்ளிக்கிழமை இரவு தகராறில் ஈடுட்டுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம உதவியாளா் அா்ஜூனன், துரைப்பாண்டி மற்றும் அவரது மனைவி இந்துமதி(25) ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிராம உதவியாளா் அா்ஜூனனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...