/

மானாமதுரையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:59 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சைல்டுலைன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் ரயில்வே துறையில் காணாமல் போகும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் சிறாா் தொழிலாளா்கள், மீட்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் சைல்டு லைன் அமைப்பு மைய இயக்குநா் பி.எஸ். வரதராஜன், ரயில்வே காவலா்கள் ரஜேஷ்கண்ணன், ராஜ்மோகன், உஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.