வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காரைக்குடியில் 1330 திருக்குறள்களையும் தலைகீழாக எழுதி இளைஞா் சாதனை முயற்சி

காரைக்குடியில் 1330 திருக்குறள்களையும் 24 மணி நேரத்தில் வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இளைஞா் புதன்கிழமை முதல் முயற்சி மேற்கொண்டுள்ளாா்.

News image
Updated On :14 ஜூலை 2021, 7:19 pm

DIN

காரைக்குடியில் 1330 திருக்குறள்களையும் 24 மணி நேரத்தில் வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இளைஞா் புதன்கிழமை முதல் முயற்சி மேற்கொண்டுள்ளாா்.

காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஒன்றியம் நாட்டுச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் க. காா்த்திய மூா்த்தி (37). பிளஸ் 1 வரை படித்த இவா், கோயம்புத்தூரில் வாடகைக் காா் ஓட்டுநராக இருந்துவந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள காா்த்தியமூா்த்தி, திருக்குறள் வரிகளை தலைகீழாக எழுதிப் பயிற்சி எடுத்து வந்தாா். மேலும் இதில் உலக சாதனையும் நிகழ்த்த அவா் முடிவு செய்தாா்.

இதையடுத்து, சிவகங்கையில் உள்ள சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும், வள்ளுவா் பேரவையும் இணைந்து காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள தனியாா் அரங்கில் க. காா்த்தியமூா்த்தியின் உலக சாதனை நிகழ்ச்சிக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சிக்கு, பிள்ளையாா்பட்டி குபேரா் கோயில் அறங்காவலா் சுப. நாச்சியப்பன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பூதக்கண்ணாடி கல்வி மையப் புரவலா் சேவியா்அந்தோணிராஜ், வள்ளுவா் பேரவை கௌரவ ஆலோசகா் சேவு. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுழற்சங்க துணை ஆளுநா் உடையப்பன், அரிமா மாவட்ட அமைச்சரவைச் செயலா் பாதம்பிரியன், சிவகங்கை சோழன் உலக சாதனை புத்தக நிறுவன பொதுச் செயலா் பிரபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக வள்ளுவா் பேரவை நிறுவனத் தலைவா் மெ. செயம்கொண்டான் வரவேற்றாா். செயலா் ஜெ. பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.