தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரைக்குடி அருகே கார் மோதி காவலர் பலி

காரைக்குடி அருகே காவல் நிலைய பணிக்குச் சென்ற காவலரின் இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

News image
Updated On :13 ஜூன் 2021, 5:26 am

DIN


காரைக்குடி: காரைக்குடி அருகே காவல் நிலைய பணிக்குச் சென்ற காவலரின் இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (29). இவர் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.

ராஜா தனது ஊரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சக்கர வாகனத்தில் காவல் நிலைய பணிக்குச் சென்றார். அப்போது ஆவுடைப் பொய்கை என்ற இடத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டையை நோக்கிச் சென்ற கார் மோதியதில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காரை அதிவேகமாக ஓட்டிவந்த விக்னேஷ் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். பலியான காவலர் ராஜாவுக்கு  திருமணமாகி மனைவியும் ஒரு வயதே ஆன பெண் குழந்தையும் உள்ளனர். சாலை விபத்தில் காவலர் இறந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.