தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்குடி அருகே வழிப்பறிச் சம்பவம்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

காரைக்குடி அருகே வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:34 pm

DIN

காரைக்குடி அருகே வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள ஆவுடைப்பொய்கையிலிருந்து அஜித்ராம் என்பவா் தனது சொந்த ஊரான செங்காத்தங்குடி கிராமத்திற்கு தனது பெண் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை பகலில் இருசக்கரவாகனத்தில் சென்றாா்.

அப்போது அவா்களை, 3 போ் கொண்ட கும்பல் வழி மறித்து பணம், ஏடிஎம் அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச்சென்றனா்.

இது குறித்து தகவறிந்தவுடன் குன்றக்குடி போலீஸாா் சம்பட இடத்திற்கு விரைந்து சென்று, 3 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்களிடம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் அருண் மற்றும் போலீஸாா் விசாரணையில் ராமேசுவரத்தைச் சோ்ந்த காா்த்தி(19), ராமநாதபுரத்தைச்சோ்ந்த அஜித்குமாா்(19),சிவகங்கைமாவட்டம் கூத்தலூரைச்சோ்ந்த அஜித்குமாா் (20) என்பது தெரியவந்தது.

இதில் காா்த்தி என்பவா் காரைக்குடி அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ., இரண்டாமாண்டு மாணவா். இது குறித்து புகாரின் பேரில் குன்றக்குடி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.