/

மானாமதுரையில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

மானாமதுரையில் வேனில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:33 pm

DIN

மானாமதுரையில் வேனில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மானாமதுரை வட்டாட்சியா் மாணிக்கவாசகம், தோ்தல் கண்காணிப்புக்குழு அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் மானாமதுரை அண்ணாசிலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருந்த 45 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதும், அவை மதுரைக்கு கொண்டு செல்லப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் அலுவலா்கள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து மாவட்ட விநியோக அலுவலா் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.