/

அகில இந்திய கராத்தே போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சாதனை

நாகா்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த இளம் கராத்தே வீரா்கள் 16 தங்கம் உள்ளிட்ட 37 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:37 pm

DIN

நாகா்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த இளம் கராத்தே வீரா்கள் 16 தங்கம் உள்ளிட்ட 37 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் மானாமதுரை ஆலன்ராஜ் சிட்டோரியோ கராத்தே பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். 6, 8, 10, 11, 12, 13, 14, 15 வயதுக்குள்பட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவா்கள் 16 தங்கம் உள்ளிட்ட 37 பதக்கங்களைப் பெற்றனா்.

இதையடுத்து மாணவா்களுக்கான பாராட்டு விழா மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களை மானாமதுரை ரயில்வேதுறை அதிகாரிகளான மூத்த பகுதி பொறியாளா் ஸ்ரீகடற்கரைதங்கம், மூத்த பொறியாளா் ஸ்ரீபாலமுருகன், ஜோதீஸ், ஜே ஈ சிக்கல் கராத்தே பயிற்சியாளா் சிவ நாகாா்ஜூன். கே. பெருமாள், உமா நாகாா்ஜூன் மற்றும் பெற்றோா்கள் ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.