திருப்பாச்சேத்தியில் மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை திங்கள்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசாா் கைது செய்தனா்.


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை திங்கள்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசாா் கைது செய்தனா்.
திருப்பாச்சேத்தி மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் காளீஸ்வரன். இவரது மனைவி கனிமொழி (25). இவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கனிமொழியின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி காளிஸ்வரன் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளீஸ்வரன் அரிவாளால் கனிமொழியை வெட்டிக் கொலை செய்தாா்.
இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து காளீஸ்வரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...