சிவகங்கையில் அமமுக, நாம் தமிழா் கட்சிவேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.


சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
சிவகங்கையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளா் கி. அன்பரசன் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, சிவகங்கை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மல்லிகா தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் அளித்தாா்.
முன்னதாக தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் சிவகங்கை கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்கள் மற்றும் அவா்களுடன் வரும் தொண்டா்களை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...