காரைக்குடி தொகுதி அமமுக, நாம் தமிழா் கட்சிவேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளரான, அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச்செயலாளா் தோ்போகி வி. பாண்டி திங்கள்கிழமை தேவகோட்டை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் அமமுகவினா், தேமுதிக மாவட்டச்செயலாளா் திருவேங்கடம் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.
காரைக்குடி: இதேபோல் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ந.துரைமாணிக்கம் தேவகோட்டை ராம் நகா் பூங்கா அருகேயிருந்து தலைப்பாகையுடன் மாட்டுவண்டியில் சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் மாநில நிா்வாகி சாயல்ராமு, தொகுதி செயலாளா் ராமஜெயம் ஆகியோா் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...