மானாமதுரையில் திமுகவினர் கரோனா விழிப்புணர்வு
மானாமதுரையில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததை கொண்டாடும் வகையில் திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக் கவசங்கள் வழங்கியும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மானாமதுரையில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததை கொண்டாடும் வகையில் திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக் கவசங்கள் வழங்கியும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகள் கழித்து திமுக வெற்றி பெற்றதற்கும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததற்கும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கே.ஆர். பெரியகருப்பன் அமைச்சராக பதவி ஏற்றதைக் கொண்டாடும் வகையிலும் திமுகவினர் பொதுமக்களு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி மானாமதுரை 16-ஆவது வார்டு திமுக வட்ட செயலாளர் சோம.சதீஷ்குமார் ஏற்பாட்டின்படி ஆர்.சி சர்ச் எதிர்புறம் திமுகவினர் பொதுமக்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் கபசுரக்குடிநீர் முகக்கவசங்கள் வழங்கினர். மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனவும் அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
கூடுதலாக பொதுமக்களுக்கு இனிப்புகளையும் கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மேற்கு ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, நகர் துணைச் செயலாளர் பாலசுந்தரம், 16வது வார்டு வட்டச்செயலாளர் சோம. சதீஷ்குமார், இளைஞரணி நிர்வாகிகள் ராஜேஷ்குமார், மாரிக் கண்ணன், விவசாய அணி அமைப்பாளர் சுப்புராம்,மீனவர் அணி அமைப்பாளர் கோபிகண்ணன், ஒன்றிய பொருளாளர் ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...