மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

3 நாள்கள் சரிவுக்குப் பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் உயர்வு!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

Indian stock markets

Updated On :5 மார்ச் 2026, 6:52 am

3 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 5) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,530.48 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 357.18 புள்ளிகள் அதிகரித்து 79,473.37 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130.55 புள்ளிகள் உயர்ந்து 24,611.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.78 சதவீதம், 0.68 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.

துறை வாரியாக,நிஃப்டி எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிகள், ஐடி பங்குகள் சரிந்தன. தவிர மற்ற துறை குறியீடுகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி மெட்டல், எண்ணெய் & எரிவாயு ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

சென்செக்ஸ் கோல் இந்தியா 4% என்ற அதிக லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை 3 சதவீதம் வரை உயர்ந்தன. மறுபுறம், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், நெஸ்லே இந்தியா ஆகியவை 1 சதவீதம் வரை சரிந்தன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

எண்ணெய் சந்தைகளை நிலைப்படுத்த அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை கொண்டு வரும் என்று டிரம்ப் கூறியது பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Summary

Stock Market: Sensex pares 270 pts from day's high, Nifty trades below 25,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.