திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை

Updated On :12 பிப்ரவரி 2026, 11:27 am IST

பங்குச் சந்தைகள் இன்று(பிப். 12) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,968.43 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 434.32 புள்ளிகள் குறைந்து 83,795.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129.15 புள்ளிகள் குறைந்து 25,824.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் 30-க்கும் மேற்பட்ட பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் (3.5 சதவீதம் சரிவு), டெக் எம், எச்சிஎல் டெக், டிசிஎஸ், விப்ரோ, எடர்னல், இண்டிகோ, எம்&எம், எஸ்பிஐ லைஃப், எச்டிஎஃப்சி லைஃப், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

அதேநேரத்தில் ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, ஐஷர் மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், கோல் இந்தியா, ஹெச்யுஎல் ஆகியவை ஓரளவு லாபமடைந்து வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.78 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.98 சதவீதமும் சரிந்தது.

துறைகளில் நிஃப்டி ஐடி மிக மோசமாக 3.75 சதவீதம் வரை சரிந்தது. தவிர, நிஃப்டி பார்மா, பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன. ஆனால் நிஃப்டி தனியார் வங்கிகள், எஃப்எம்சிஜி தலா 0.1 சதவீதம் அதிகரித்தன.

ஐடி பங்குகள் அதிகம் விற்கப்படுவதால் பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன.

Summary

Banks help Sensex come lows, down 500 pts; Nifty IT dips 4 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.