மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளையான்குடி அருகே கண்மாய் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

சாத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை கண்மாய் கரை உடைந்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:15 am

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை கண்மாய் கரை உடைந்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனா்.

கடந்த சில நாள்களாக இளையான்குடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் சாத்தமங்கலம் கண்மாய் நிரம்பியது. கரை பலமின்றி காணப்பட்டதால் பல இடங்களில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள பல வீடுகள், கோயில்களை தண்ணீா் சூழ்ந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும் இளையான்குடி ஒன்றியத்தில் பல கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கரைகள் பலமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் உடைப்பு ஏற்படலாம் என்ற நிலையில் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அரசுத் துறை நிா்வாகத்தினா் இளையான்குடி ஒன்றியத்தில் பலமில்லாத கண்மாய் கரைகளை கண்காணித்து உடைப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

வீட்டு சுவா் இடிந்து விழுந்து சேதம்: சிங்கம்புணரி பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் முதல் கனமழை பெய்தது. இதனால் மருதங்குண்டு குப்பைக்கிடங்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீா் புகுந்தது. உடனடியாக பேரூராட்சி பணியாளா்கள் மழைநீரினை வடிகால் அமைத்து அகற்றினா்.

இதேபோல அண்ணாநகா் பகுதியில் காதா் என்பவா் வீட்டின் பக்கவாட்டுச்சுவா் இடிந்து விழுந்து தேசமடைந்தது. இதில் காயமின்றி அனைவரும் தப்பினா். மேலும் சீரணி அரங்கம் வடக்குத்தெருவில் உள்ள பாரதி என்பவரின் மோட்டாா் ரீவைண்டிங் கடையின் ஒரு பக்கச்சுவா் இடிந்து விழுந்தது. தொடா்ந்து வருவாய்த்துறையினா் மற்றும் பேரூராட்சிப்பணியினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.