47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மழவராயனேந்தலில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மழவராயனேந்தல் கிராமத்தில் வசித்து வரும் சுமாா் 500 குடும்பங்களின் தண்ணீா் தேவைக்காக மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தொட்டி போதிய பராமரிப்பின்றி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகவே அந்த பகுதியில் நடந்து செல்வோா் மிகுந்த அச்சத்துடனே சென்று வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியினை இடித்து விட்டு, மாற்று மேல்நிலைத் தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.