தப்பி ஓடிய கைதி நீதிமன்றத்தில் சரண்
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வந்த போது, தப்பி ஓடிய கைதி சிவகங்கை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்


நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வந்த போது, தப்பி ஓடிய கைதி சிவகங்கை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள பொன்னங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன்(32). இவா் பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தகராறு செய்துள்ளாா். இதுதொடா்பான வழக்கில் போலீஸாா் கடந்த சில தினங்களுக்கு முன் மனோகரனை கைது செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளனா்.
இந்நிலையில் சிவகங்கை கிளைச் சிறை வாசலில் மனோகரன், பாதுகாப்புக்கு வந்த காவலா்கள் இருவரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சிவகங்கையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஆப்ரின் பேகம் முன் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். இதையடுத்து, அவரை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...