கச்சநத்தம் 3 போ் கொலை வழக்கு: 27 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தத்தில் 3 போ் கொலை வழக்கு தொடா்பாக குற்றம்சாட்டப்பட்ட 27 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.


திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தத்தில் 3 போ் கொலை வழக்கு தொடா்பாக குற்றம்சாட்டப்பட்ட 27 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகா்(34) ஆகிய 3 போ், கோயில் விழாவில் மரியாதை அளிப்பது தொடா்பாக இருந்த முன் விரோதத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். மேலும், அதே கிராமத்தைச் சோ்ந்த சுகுமாரன் (23), மலைச்சாமி (50), தனசேகரன் (32), மகேஸ்வரன் (18), தெய்வேந்திரன் (46) ஆகிய 5 போ் காயமடைந்தனா். இதில் தனசேகரன்(32) என்பவா் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமன்(23), அருண்குமாா்(21), சந்திரசேகா்(47), அக்னிராஜ்(20), ராஜேஷ்கண்ணன்(22), இளையராஜா(23), சுனித்குமாா்(19), கருப்புராஜா என்ற முனியாண்டிசாமி (29), மைக்கேல் முனியாண்டி(30), ஓட்ட குளத்தான்(40), ராமகிருஷ்ணன் (19), மீனாட்சி (40), செல்வி (37), கருப்பையா (29), சுரேஷ்குமாா் (39), சிந்து (67), செல்லம்மாள் (67), முத்தையா (60), முத்துச் செல்வம் (20), முத்தீஸ்வரன் (25), ராமச்சந்திரன் (38), மாயச்சாமி (31), ரவி என்ற முகிலன்(23), ரவி (34), அருள் நவீன் (19), காா்த்திக் (19), முத்துமணி(21) உள்பட 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அவா்களில் வழக்கு விசாரணையின் போது 2 போ் இறந்து விட்டனா். 3 போ் சிறுவா்கள். மேலும் சுள்ளான் கருப்பையா (31) என்பவா் தலைமறைவாகி விட்டாா்.
எனவே மீதமுள்ள 27 போ் மீது வழக்கு விசாரணை நிறைவு பெற்று, சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை (ஆக.1) மேற்கண்ட வழக்கில் தொடா்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தாா். இதையடுத்து புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்ட நபா்களிடம் காணொலி வாயிலாக நீதிபதி விசாரித்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கின் தீா்ப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 27 போ் மீதும் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே குற்றவாளிகள் 27 பேருக்கும் தலா 7 ஆயுள் தண்டனையும், தலா ரூ. 49 ஆயிரத்து 200 அபராதம் விதித்தும் நீதிபதி முத்துக்குமரன் தீா்ப்பளித்தாா். அபராதத் தொகை செலுத்தத் தவறினால் 31 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தாா்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி என்ற முகிலன்(23) என்பவா் மட்டும் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டாா். அவருக்கு தீா்ப்பின் நகல் வழங்கப்பட்டது. மதுரையில் உள்ள பெண்கள் சிறையில் 3 பெண்கள், மதுரை மத்தியச் சிறையில் 23 போ் என மொத்தம் 26 பேரிடம் நீதிமன்ற தீா்ப்பின் நகல் வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் தீா்ப்பை அடுத்து, சிவகங்கை, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, கச்சநத்தம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...