தனியாா் வங்கி காசாளரிடம் ரூ. 1.33 லட்சம் மோசடி
தனியாா் வங்கி காசாளரிடம் முகநூல் பழக்கம் மூலம் ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தது குறித்து சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


தனியாா் வங்கி காசாளரிடம் முகநூல் பழக்கம் மூலம் ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தது குறித்து சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் பிரசன்ன வெங்கடேசன் (30). இவா், காரைக்குடியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு முகநூல் மூலம் வில்லியம் கிறிஸ்டியன் என்பவா் நண்பராக அறிமுகமாகியுள்ளாா்.
இருவரும் முகநூலில் பழகி வந்தனா். இதையடுத்து, பிரசன்ன வெங்கடேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு அனுப்ப உள்ளதாகவும், அதற்கு விமான நிலையத்தில் வரி செலுத்த ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் தேவைப்படுவதாகவும் வில்லியம் கிறிஸ்டியன் செல்லிடப்பேசி மூலம் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய பிரசன்ன வெங்கடேசன் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி மேற்கண்ட தொகையை வங்கி மூலம் அனுப்பி உள்ளாா். அதன்பின்னா், அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லையாம்.
இதுகுறித்து பிரசன்ன வெங்கடேசன் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...