மானாமதுரையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
நகராட்சி அந்தஸ்தில் தேர்தலை சந்திக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.


நகராட்சி அந்தஸ்தில் தேர்தலை சந்திக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
பேரூராட்சியாக இருந்த மானாமதுரை கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நகரில் 27 வார்டுகள் உருவாக்கப்பட்டன. தேர்தலுக்காக நகரில் 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என 95 பேர் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிக்கு வயதானவர்களை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஆட்டோக்களில் ஏற்றிவந்து வாக்குச்சாவடிகளில் இறக்கிவிட்டனர்.
அங்கு இவர்கள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து உடனடியாக வாக்குச்சாவடிகளுக்குள் சென்று வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. நகரில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட 27 வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு வேகமாக நடந்ததால் வாக்குச்சாவடியில் வாக்காளர்களிகளின் வருகைக்காக வாக்குச்சாவடி பணியாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதேபோல் திருப்புவனம், இளையான்குடி ஆகிய பேரூராட்சி வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...