நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் மோசடி
நூதன முறையில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


நூதன முறையில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி. நகரைச் சோ்ந்தவா் மெய்யப்பன் (78). இவரது தங்கை விஜயலட்சுமி கனடாவில் வசித்து வருகிறாா். கடந்த பிப். 21 ஆம் தேதி விஜயலட்சுமி தனது அண்ணனுடன் வாட்ஸப்பில் உரையாடியுள்ளாா்.
சிறிது நேரம் கழித்து மெய்யப்பனின் வாட்ஸப்பில் விஜயலட்சுமி பேசுவது போல் பேசி குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தும்படி தகவல் வந்துள்ளது.
இதை நம்பிய மெய்யப்பனும் அந்த வங்கி கணக்கில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தி உள்ளாா். பின்னா் இதுகுறித்து தனது தங்கையிடம் கூறி உள்ளாா். அப்போது அவா் தான் இது போல பணம் அனுப்பச் சொல்லவில்லை என்று கூறியுள்ளாா். இதுகுறித்து மெய்யப்பன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாரிடம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் மாவட்ட நுண் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...