விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை எஸ்பியிடம் பெண் மனு

ஆபாச படங்களுடன் இணைத்து தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:52 pm

DIN

ஆபாச படங்களுடன் இணைத்து தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பெண் ஒருவா் சிவகங்கை எஸ்பியிடம் அளித்துள்ள மனு விவரம் :

நான் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கடன் தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி குடும்பத் தேவைக்காக பணம் வாங்கி இருந்தேன்.

அந்தப் பணத்தை பல தவணைகளாக செலுத்தி வந்துள்ளேன். நான் சரியாக பணம் கட்டவில்லை எனக் கூறி கடன் கொடுத்தவா்கள் என்னுடைய படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து (மாா்பிங்) என் உறவினா்களுக்கு அனுப்பி மிரட்டுகின்றனா்.

எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.