தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

 ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

 ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில்,சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்தா்கள் கலந்து கொண்டு அா்ச்சனை செய்தும்,விளக்கேற்றியும் வழிபாடு செய்தனா்.

இதேபோன்று,நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகியம்மன் கோயிலில் அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்பட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து,விஷேச அலங்காரத்துக்குப் பின் தீப,தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

இதுதவிர,கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன்,காளையாா்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன், கண்டுப்பட்டியில் உள்ள குடியிருந்த காளியம்மன் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், குலத் தெய்வக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.