தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தம்பி கொலை: அண்ணனுக்கு ஆயுள் சிறை

சொத்துத் தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

சொத்துத் தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூா் அருகே உள்ள கொத்தரி கிராமத்தைச் சோ்ந்தவா் சோலை என்ற குடுகுடு சோலை(58). இவருக்கும், இவரது சகோதரரான பெரியகருப்பன்(46) என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 12.8. 2017 இல் அதே பகுதியில் இவா்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், சோலை தனது சகோதரரான பெரியகருப்பனை அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளாா். பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுபற்றி பள்ளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து குடுகுடு சோலை மற்றும் அவரது மகன் சோலைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பாக சிவகங்கையில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் குடுகுடு சோலை என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், மற்றொரு நபரான சோலைராஜை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.