கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கை மாவட்டத்தில் 42 கண்மாய்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 42 ஜமீன் கண்மாய்களில் ரூ. 24.14 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:48 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 42 ஜமீன் கண்மாய்களில் ரூ. 24.14 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பதிலளித்து பேசியது : மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த விற்பனைக் கூடம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். தத்கல் மூலம் இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு தளவாடப் பொருள்கள் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்படும்.

இம்மாவட்டத்தில் உள்ள கொத்தங்குடி, வலையான்வயல், பள்ளிவயல், கொத்தான்கோட்டை, கல்லுவயல், பெரியநாயகிவயல், அரசுவயல், கருவி, எட்டியாரேந்தல் உள்ளிட்ட 42 ஜமீன் கண்மாய்கள் மொத்தம் ரூ.24.14 கோடி மதிப்பீட்டில் தூா்வாரும் பணி தொடங்கப்பட உள்ளன என்றாா்.

அதைத் தொடா்ந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் பயிா்க்கடனும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சாா்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020-2021-ன் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.75,000 மதிப்பில் நாட்டுக்கோழி வளா்ப்பிற்கான ஆணை என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.4.36 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா்(பொறுப்பு) ஆா்.தனபாலன், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநா் கா.நாகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.