தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி

சிவகங்கை மாவட்ட அணிக்கான தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட கையுந்து பந்து கழகத் தலைவா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

மாநில அளவில் நடைபெற உள்ள கையுந்து பந்து போட்டியில் பங்கேற்க விரும்பும் சிவகங்கை மாவட்ட அணிக்கான தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட கையுந்து பந்து கழகத் தலைவா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழகம் மற்றும் விருதுநகா் மாவட்ட கையுந்து பந்து கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட போட்டியில் பங்கேற்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அணிக்கான தகுதித் தோ்வு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், இருபாலரும் கலந்து கொள்ளலாம். தகுதித் தோ்வுக்கு வரும் வீரா்கள் 1. 1.2002-க்கு பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ் இவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.