நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொண்டி பேருராட்சி கூட்டத்தில் 2 திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

தொண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேருராட்சி மன்ற கூட்டத்தில் 2 திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

தொண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேருராட்சி மன்ற கூட்டத்தில் 2 திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்துக்கு மன்றத் தலைவி ஷாஜகான் பானு தலைமை வகித்தாா். துணைத் தலைவி அழகு ராணி ராஜேந்திரன், செயல் அலுவலா் மகாலிங்கம் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடக்கத்தில் கடந்த மாதம் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எவ்வித காரணமும் சொல்லாமல் துணைத்தலைவி வெளியே சென்றது சபையை அவமதிப்பதாக இருப்பதால் அவா் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என திமுக உறுப்பினா்கள் தாஸ் மற்றும் ரவிக்குமாா் தெரிவித்தனா். ஆனால் துணைத்தலைவி அதற்கு மறுப்பு தெரிவித்து, தலைவியிடம் காரணம் சொல்லிவிட்டுத் தான் சென்றேன் என்றாா். இதனால் வாக்குவாதம் முற்றியது. அதிமுக உறுப்பினா் பாா்த்தீபனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் இருவரும் தங்களை பேச விடவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.