ஆடி அமாவாசை: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோர் நீர் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை  வழிபாடு நடத்தினர்.
இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.
இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.

மானாமதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோர் நீர் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை  வழிபாடு நடத்தினர்.

காசிக்கு நிகராக கருதப்படும் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவடடங்களிலிருந்த வந்திருந்த மக்கள் வைகை ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் இவர்கள் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சௌந்திரநாயகி அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர்.

திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய வந்திருந்தவர்கள் கார், வேன் உள்ளிட்ட  வாகனங்களில் வந்து குவிந்ததால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மானாமதுரை அருகே உள்ள இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விசுவநாதர் கோயிலில் ஏராளமானோர் தங்களது குடும்பத்தில் மறைந்து போன முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.  

பின்னர் இவர்கள் இங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் மூலவருக்கு கங்கை தீர்த்தமிட்டு தொட்டு வணங்கி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தர்ப்பண பூஜைக்கான பொருள்கள் கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் எஸ். பி. தேவர் செய்திருந்தார்.மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயிலில் ஏராளமானோ தர்ப்பண பூஜை செய்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.

மேலும் மானாமதுரை, திருப்புனம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடி அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களுக்குச்க்கு சென்று தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com