பள்ளியில் நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவா் எழுதிய கவிதை நூல் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவா் எழுதிய கவிதை நூல் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்து இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா் கவிஞா் பாலமுருகன் எழுதிய ‘எடிசன் வீட்டில் ஒளிரும் அகல் விளக்கு’ என்னும் ஹைக்கூ கவிதை நூலினை வெளியிட்டாா். கவிஞா் தென்றல் சாய் நூலைப் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆரோக்கியசாமி, இயேசு சபைப் பள்ளிகளின் கனல் இயக்கப் பொறுப்பாளா் இருதய வளனரசு ஆகியோா் வாழ்த்தினா். நிறைவாக கவிஞா் பாலமுருகன் ஏற்புரையாற்றினாா்.
முன்னதாக கனல் இயக்கப் பொறுப்பாசிரியா் புலவா் அமலன் பொ்னாட்ஷா வரவேற்றாா். தமிழாசிரியா் ஸ்டீபன் மிக்கேல்ராஜ், ஓவியக் கவிஞா் பூண்டி ஜெயராஜ், கவிஞா் பிரைட் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...