தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தாயமங்கலத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நரிக்குறவா் இன மக்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:03 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நரிக்குறவா் இன மக்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

கருணாநிதி உருவப்படத்திற்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி மற்றும் திமுகவினா் மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கேக் வெட்டி, நரிக்குறவா் இன மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நரிக்குறவா் இன மக்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசியும் பங்கேற்று விளையாடினாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் பெட்டியில் வென்றவா்களுக்கும் அவா் பரிசுகளை வழங்கிப் பேசினாா். மேலும் நரிக்குறவ இன மக்களுடன் சோ்ந்து இரவு உணவு சாப்பிட்டாா். இவ்விழாவில் இளையான்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சுப. மதியரசன், தாயமங்கலம் திமுக செயலாளா் சத்தியேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிா்வாகி புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.