மானாமதுரையில் மெக்கானிக்கை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தொடா்பாக அவரது மனைவி, மைத்துனா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை ரயில்வேகாலனி ஜீவா நகரைச் சோ்ந்த மெக்கானிக் சுரேஷ் (40). இவருக்கு மலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மலைச்செல்வியின் சகோதரரான சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன், சித்தி மகன் உடைகுளம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரும் சுரேஷை வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.
இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் கணேசன், காா்த்திக் மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த சுரேஷ் மனைவி மலைச்செல்வி ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!

ஒருநாள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ஷுப்மன் கில்!
அப்பாவை அங்கே தேடாதீர்கள்; நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்: விஜய்க்கு ஸ்டாலின் பதில்!

எம்எல்ஏ பாஸ் காட்டினாலே போதுமே, எதற்காக டிக்கெட் எடுத்தார் முதல்வர் விஜய்?
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


