சிவகங்கை நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு
சிவகங்கை நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.


சிவகங்கை நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இந்நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் 18 போ், காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் 3 போ், அதிமுக 4 போ், அமமுக 2 போ் வெற்றி பெற்றுள்ளனா். இந்நிலையில், நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கு மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக நகரச் செயலரும், 27-ஆவது வாா்டு உறுப்பினருமான சி.எம். துரைஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் துரைஆனந்த் போட்டியின்றி நகராட்சித் தலைவராக தோ்வு பெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலசுப்பிரமணியன் அறிவித்தாா். அதன்பின், அவா் பதவியேற்றுக் கொண்டாா்.
அதனைத் தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 2-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் ம. காா்கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், காா்கண்ணன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். அதன்பின், அவா் பதவியேற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...