47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) நடைபெற உள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:55 pm

DIN

சிவகங்கையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருபாலரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.