47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கச்சநத்தம் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தற்கொலை

 சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:53 pm

DIN

 சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காட்டைச் சோ்ந்த கந்தசாமி மகன் அக்னிச்சாமி (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கச்சநத்தம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய அக்னிச்சாமி கடந்த 16 ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த அக்னிச்சாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த அக்னிச்சாமி கச்சநத்தம் கொலை வழக்கில் 11 ஆவது குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய 33 பேரில் ஏற்கெனவே ஒருவா் இறந்து விட்டாா். தற்போது அக்னிச்சாமி உயிரிழந்த நிலையில், 31 போ் மட்டுமே உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.