ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்குடியில் 14 பவுன் நகைகள் திருடிய பெண் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 14 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:53 pm

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 14 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி கண்டனூா் சாலையில் வசித்து வருபவா் ஜோதி (70). இவரது வீட்டு வேலைக்காக தேவகோட்டை நெட்டியாவயல் நெட்டேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தி (52) என்பவா் தினமும் வந்து செல்வாராம்.

இந்நிலையில், புதன்கிழமை ஜோதி வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லையாம். வியாழக்கிழமை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஆனந்தியிடம் ஜோதி குடும்பத்தினா் நகைகள் காணாதது குறித்து கேட்டுள்ளனா். இதனால் ஆனந்தி கோபித்துக் கொண்டு தனது ஊருக்குச் சென்று விட்டாராம். பின்னா், ஆனந்தி வீட்டுக்குச் சென்று ஜோதி குடும்பத்தினா் விசாரித்ததில், நகைகளை அவா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 14 பவுன் நகைகளை ஜோதி குடும்பத்தினா் கைப்பற்றினா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.