கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சாக்கூர் கோயிலில் தவக்கோல சிவனை தரிசிக்க குவிந்த வட மாநில பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் கோயிலில் தவக்கோல சிவனை தரிசிக்க வட மாநில பக்தர்கள் குவிந்தனர்.

மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் தவக்கோல சிவனைக் கண்டு தரிசித்த வட மாநில பக்தர்கள்.

Published On :

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் கோயிலில் தவக்கோல சிவனை தரிசிக்க வட மாநில பக்தர்கள் குவிந்தனர்.

தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் ஸ்ரீ ஜெயம் பெருமாள், ஸ்ரீ ஜெகதீஸ்வரர், சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ராகு-கேது பகவானுக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. இதேபோல் சுப்பிரமணியர் சன்னதியில் தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக தவக்கோல சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சமீபத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 

தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ள ராகு -கேது பகவானை தரிசிக்கச் சென்ற வட மாநில பக்தர்கள்.

தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ள ராகு -கேது பகவானை தரிசிக்கச் சென்ற வட மாநில பக்தர்கள்.

இதையடுத்து தவக்கோல சிவனையும் தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ள ராகு-கேது பகவானையும் தரிசிக்க தினமும் ஏராளமானோர் தஞ்சாக்கூர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தவக்கோல சிவனைக் கண்டு தரிசிக்க தஞ்சாக்கூர் கோயிலுக்கு வந்தனர். 

மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் மதுரை வந்த இவர்கள், அங்கிருந்து சுற்றுலா வேன்கள் மூலம் தஞ்சாக்கூர் கோயிலுக்கு வந்து தவக்கோல சிவன், ராகு-கேது பகவானை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான பாலசுப்பிரமணியன் சிவனுக்கான பூஜைகளை நடத்தினார். மேலும் கோயிலில் இந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.